யாழிலும் அடித்து தீர்த்தார் சஜித்?


போகின்ற இடமெல்லாம் பந்தடித்து விளையாடும் சஜித் யாழ்ப்பாணத்தையும் விட்டவைக்கவில்லை.யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஐpத் பிரேமதாசா இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் மற்றும் உதைபந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தார்.

யாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மாதிரிக் கிராமத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் சஐpத் பிரேமதாசா இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது வீட்டுத் திட்டத்தை திறந்து வைத்த வீட்டு உரிமையாளர்களுக்கு பத்திரங்களையும் அமைச்சர் வழங்கி வைத்ததுடன் வீட்டு உபகரணங்கள் மற்றும் அங்கிருந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வின் போது அவ்விடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து தானும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கால்ப்பந்து விளையாட்டுக்ளை விளையாடியிருந்தார். அத்தோடு இளைஞர்களுக்கு வளையாட்டு உபகரணங்கள் சிலவற்றை வழங்கியதுடன் மேலும் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் கூறியிருந்தாராம்.

No comments