மதிய விருந்தின் போது அரசியல் தீர்வு பேச்சாம்?


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எனக்குமிடையில் எவ்வித முரண்பாடும் இல்லை. நாம் தினமும் பேசிக் கொண்டுதானிருக்கிறோம் என அரச அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டுக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரத்தை வழங்குவோம் என்பதில் நாம் உறுதியாகவிருக்கிறோம். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அந்த நிலைப்பாட்டில்தான் நாம் இருக்கிறோம். தற்போது கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கவே நாம் முயற்சித்து வருகிறோம். மக்கள்தான் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.

நான் கட்சியின் பிரதித்தலைவராக இருக்கிறேன். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவேன் என்பதில் உறுதியாகவிருக்கிறேன். அவ்வாறு களமிறங்கினால் வெற்றி உறுதி என்பதையும் நான் இவ்வேளையில் கூறிக் கொள்கிறேன்.நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன்,சுமந்திரன்,மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன் ஆகியோருக்கு யாழில் அவர் மதிய போசன விருந்தளித்ததாக தெரியவருகின்றது.

இம்மதிய விருந்தின் போது கூட்டமைப்பினர் தமிழ் மக்களிற்கு தரக்கூடிய அரசியல் தீர்வு பற்றி (?) பேசியிருந்ததாக கட்சி ஆதரவாளர்கள் கருத்து பகிர்ந்துள்ளனர்.

No comments