24ம் திகதி ஜதேகவின் ஜனாதிபதி ?


ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் திகதி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் இரண்டு பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரே கட்சியின் தலைமைத்துவத்திற்கு இந்த தகவலை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் அலரிமாளிகையில் நேற்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை எதிர்வரும் 24ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

No comments