மீண்டும் தொடங்கினார் சுமந்திரன் தரகர் தொழிலை?

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படும் பட்சத்தில், அதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத், இதனைக் குறிப்பிட்டார்.
தமது வேட்பாளர் ஒருவர் இருக்கின்ற நிலையில், தாம் எந்தவொரு வேட்பாளருக்கு இந்த முறை ஆதரவு தெரிவிக்க போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில், அதற்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் விடுதலை முன்னணி இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் பிரதமரிடம் தெரிவித்ததாக சில செய்திகள் வெளியாகியிருந்தன.

No comments