முற்றுகிறது ரணில் -ஹக்கீம் மோதல்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பின்னணியில் பிரதமர் சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் ரவூப் ஹக்கீம் செயற்பட்ட விதமானது, அமைச்சரவை நடைமுறைகளை மீறி செயற்பட்டரா என்பது குறித்து ஆராய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் எவ்வாறான சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என்பது தொடர்பில் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதியா அல்லது பிரதமரா கூட்டியது என்பது தொடர்பிலும் அறிந்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கூறியுள்ளார்.

No comments