பிக்குகளின் அடவடித்தனை ஐநாவின் கவனத்துக்கு எடுத்துசொன்ன கஜேந்திரகுமார்;


நீதிமன்றத்  தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும் என  ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார் உரையாற்றியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத் தொடரின் இனவெறிஇ இன பாகுபாடுஇ இனவெறி மற்றும் சகிப்புத்தன்மையின் தொடர்புடைய வடிவங்கள்இ டர்பன் பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தின் பின்தொடர்தல் மற்றும் செயல்படுத்தல் தொடர்பான பொது விவாதத்தில் விடயம் 9 ன் கீழ் 24-09-2019 செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரை வருமாறு.

மனித உரிமைகள் பேரவை                             
வழங்குபவர்: கஜேந்திரகுமார். ஜி. பொன்னம்பலம்
42வது அமர்வு
விடயம் 9 பொது விவாதம் - இனவெறிஇ இன பாகுபாடுஇ இனவெறி மற்றும் சகிப்புத்தன்மையின் தொடர்புடைய வடிவங்கள்இ டர்பன் பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தின் பின்தொடர்தல் மற்றும் செயல்படுத்தல்

கனம் உபதலைவர் அவர்களே

இந்த உரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியுடன் இணைந்து இங்கே சமர்ப்பிக்கப்படுகிறது. 

நாடுகளின் அரசியல் விருப்பமின்மையும் அங்கு நிலவுகின்ற இனத்துவேச மனநிலை மற்றும் பதிந்துள்ள  எதிர்மறை  எண்ணக்கருக்கள் என்பனவே இனப்பாகுபாட்டை வெற்றிகொள்வதற்கும்  இன சமத்துவத்தை அடைவதற்கும் எம்முன்னே உள்ள பெரும் தடைக்கற்களாக விளங்குவதாக டப்ளின் பிரகடனமும் செயற்திட்ட அறிக்கையும் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 9 வது உறுப்புரையானது ' பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்துகின்றது.  அதன் பிரகாரம் பௌத்த சாசனத்தை பேணிப்பாதுகாத்து வளர்ப்பது சிறிலங்கா அரசின் கடமை என தெளிவாக கூறியிருக்கிறது.

பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமை என்கிற அரசியலமைப்பின் கடப்பாடானது, பௌத்தரல்லாத ஏனைவர்கள் மேல், குறிப்பாக, பிராந்திய ரீதியில் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையினராக இல்லாத இலங்கையின் ஒரேயொரு பிராந்தியமான வடக்கு கிழக்கு பகுதிகளில் மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

முல்லைத்தீவு நாயாறு ( செம்மலை) பகுதியில், பாரம்பரிய சைவ ஆலயம் ஒன்றின் வளாகத்தினுள் ஒருவருடத்துக்கு முன்னர் சட்டவிரோதமாக தொடங்கியிருந்த ஒரு பௌத்த வணக்கஸ்தலத்தின் கட்டுமானப்பணிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றினால் பௌத்த ஆலயத்தின் கட்டுமானப்பணிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேற்படி சட்டவிரோதமான பௌத்த  ஆலயத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டிருந்த பௌத்த மதகுருவானவர், சில நாட்களுக்கு முன்னர் நோய் காரணமாக மரணமடைந்திருந்தார்.

அதனையடுத்து, இறந்த பௌத்த பிக்குவின் உடலத்தை, குறிப்பிட்ட இந்து ஆலயத்தின் வளாகத்தினுள் வைத்துத் தகனம் செய்வதற்காக பௌத்த பிக்குகளோடு சிங்கள பௌத்த காடையர்களும் வெளியிடங்களிலிருந்து பஸ்கள் மூலம் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.

இறந்த பிக்குவின் உடலை கோயில் வளாகத்தில் தகனம் செய்வதற்கு எதிராக நேற்று முன்தினம் ( 23-09-19) நீதிமன்ற தடையுத்தரவொன்று பெறப்பட்டிருந்தது.

ஆனால், பௌத்த பிக்குமாரும் சிங்கள  பௌத்த காடையர் கும்பலும் பௌத்ததுக்கு முன்னுரிமை வழங்கும் அரசியலமைப்பின் வாசகங்களை முன்னிறுத்தி, நீதிமன்ற தடை உத்தரவுக்கு உரிய  மதிப்பளிக்க மறுத்துவிட்டனர் ஃ நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து செயற்பட்டிருந்தனர்.
அத்தோடு இந்த ஐநா மனித உரிமை பேரவையின் அமர்வுகளில்  வழமையாக பங்குபற்றிவருகின்றவர்களும்   அந்த நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுக்கொண்டவர்களுமான வழக்கறிஞர்கள் மீது சிறிலங்கா பொலீஸார் பார்த்துக்கொண்டிருக்க தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கனம் உபதலைவர் அம்மையார் அவர்களே, 
இவையெல்லால் இனவாத செயற்பாடுகள்  ஆகும் என்பதை உங்கள் கவனத்திற்கு  கொண்டு வருகின்றேன் என்றார்.

No comments