கிளங்கன் வைத்திய சாலையில் நோயாளர்கள் துன்புறுத்தல்

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நோயாளிகள்என்றுகூட பார்க்காமல் துன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அதன் இணைத் தலைவரும் நுவரெலியா மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கே. பியதாச தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன், மாவட்ட செயலாளர் ஆர். எம்.புஸ்பகுமார, நுவரெலியா மாவட்டம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments