சஜித்தின் அழைப்பையேற்று மீண்டும் ஐதேகவுடன் சங்கமிப்பாரா திஸ்ஸ!


ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையுமாறு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் எனது நிலைப்பாட்டை இன்று (25) மதியம் விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெளிவுபடுத்துவேன் என்று ஐ.தே.கவின் முன்னாள் பொதுச் செயலாளரும், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதற்காக கட்சியை விட்டுவெளியேறியவருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மீண்டும் தாய் வீடு திருப்புவேனா, இல்லையா போன்ற உங்களின் கேள்விகளுக்கெல்லாம் அந்த அறிக்கையில் பதில்கள் காத்திருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

No comments