மட்டக்களப்பு மாவட்டக் கொள்ளைகள் தொடர்பில் ஆயுதங்களுடன் ஐவர் கைது


மட்டக்களப்பின் பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஐவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) முச்சக்கரவண்டியில் சென்ற மூவரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, கள்ளியங்காடு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 10 தோட்டாக்களும், கைபேசிகள், வீடுகளை உடைக்கும் உபகரணங்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments