திலீபன் வழியில் வருகிறோம் நல்லூரை சென்றடைந்தது!


'பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்!'

உட்பட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கடந்த (21) தொடங்கிய "திலீபன் வழியில் வருகிறோம்" யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் நான்காவது நேற்று (25) நாவற்குழியை சென்றடைந்திருந்தது.

இந்நிலையில் இன்று (26) அதே இடத்தில் தொங்கிய நடைபயணம் திலீபனின் நினைவிடத்தை நோக்கி நகர்ந்து. 10 மணியளவில் அங்கு சென்றடைந்தது.

இதனையடுத்து நல்லூர் ஆலய வளாகப் பகுதியில் வைத்து மௌன அஞ்சலியுடன் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments