தேரர்களின் அடாவடியை கண்டித்து ஞானசாரவின் படம் எரிப்பு


நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகக் கேணிப் பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ் சட்டத்தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை முன் இருந்து மாவட்டச் செயலகம் வரை கண்டனப் போராட்டம் ஒன்று இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கறுப்பு துணிகளால் வாய்களை கட்டியபடியும், கறுப்புக் கொடிகளை ஏந்தியபடியும் பொது மக்கள், சட்டத்தரணிகள், மத குருக்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் எனப் பெருமளவானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது ஞானசார தேரரை கைது செய்யக் கோரி கோசம் எழுப்பப்பட்டதுடன், ஞானசார தேரரின் உருவப் படங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது.
No comments