சர்ச்சைக்குரிய தேரரின் உடல் தொடர்பான தீர்ப்பு!


முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் கடந்த (21) புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

குறித்த தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தகனம் செய்ய பாதுகாப்பு படையினர் உட்பட பௌத்த தேரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இதற்கு நேற்று அதிகாலை முதல் இன்று வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உடல் தகனம் தொடர்பான தீர்ப்பு விசாரணை இன்று (23) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டத்தரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

இதற்குரிய தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் பலரும் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

No comments