பரபரப்பாகும் அரசியல் களம்; சஜித் - ரணில் விரைவில் நேரடி சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாமே வேட்பாளராக களம் இறங்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க இதன்போது குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இந்த தகவலை நிராகரித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், பிரதமர் அவ்வாறான கருத்தை கூறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்ததாக தமது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் எதிர்வரும் 8ம் திகதி பிரதமர் ரணிலும் அமைச்சர் சஜித்தும் சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும், அதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகட்சிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments