மாலிங்கவின் உலக சாதனை

சர்வதேச ரி-20 அரங்கில் இரண்டாவது முறையாக ஹட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடன் இன்று நடைபெற்று ரி-20 போட்டியின் போதே இச்சாதனைய அவர் நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன், தொடர்ச்சியாக நான்கு பந்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்திய வீரராகவும் மாலிங்க உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2016/17 தொடர் ஒன்றின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக மாலிங்க தனது முதல் ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments