சஜித்துக்காக கிளிநொச்சியில் பொங்கல்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமையையடுத்து கிளிநொச்சியில் கட்சியின் ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி இனிப்பு பண்டங்கள் வழங்கி கொண்டாடியுள்ளனர்.

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று (26) ஒன்று கூடி பொங்கல் பொங்கியதோடு, பொது மக்களுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

No comments