ஒற்றையாட்சியினுள் தீர்வு:சஜித் நிலைப்பாடு?


ஒருமித்த நாட்டுக்குள் அதியுட்ச அதிகாரப்பகிர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, அதிகாரப்பகிர்வு விடயம் உள்ளிட்ட விடயங்கள்  தொடர்பில் தான் முன்வைக்கும் அனைத்து யோசனைகளும் தன்னுடைய  யோசனைகளே என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
தனது அரசியல் வரலாற்றில் ஒருபோதும், நிபந்தனை அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச,   நிபந்தனைகளை முன்வைப்பதும் ஏற்றுக்கொள்வதும் இல்லை  என்றார்.
புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் எமது பயணத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பேதங்கள் பாராது ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மனிதத்துவத்துக்கு முதலிடம் கொடுக்கும் யுகமொன்றை உருவாக்க தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments