நல்லூர் போல் கம்பீரமான நகராக யாழ்ப்பாணத்தை மாற்றுவாராம் பிரதமர்

அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று (07) அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

யாழ்ப்பாணம் மாநகர  மண்டபத்திற்கு நாம் இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். இது யாழ்ப்பாணத்திற்கு அழகிய மண்டபமாக இருக்கப் போகிறது.  நல்லூர் ஆலயம் எந்தளவு அழகியதொரு கம்பீரமாக எழுந்து நிற்கின்றதோ அதேபோல் எல்லோராலும் பேசப்படக்கூடிய அழகான புதியதொரு யாழ்ப்பாணம் நகரத்தை  கட்டியெழுப்ப்படும் மாபெரும் திட்டம் இது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள்? எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள்? என தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார். என்னிடம் கேட்பார். அமைச்சிடம் கேட்பார். இப்படியாக யாழ் மாநகரத்தை கட்டியெழுப்பும் பணியில் அவரது பங்களிப்பு பாராட்ட வேண்டியதாகும் இவ்வாறானவர்கள் தான் எமக்கு கட்டாயமாக தேவையாகும் கைகொடுத்துக்கொள்ள வேண்டியவர்  என குறிப்பிடுகின்றேன். என்றார்.

No comments