எரிந்த நிலையில் மாணவியின் சடலம்; கொலையா? விபத்தா?

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் இன்று (7) காலை பிரத்தியேக வகுப்பிற்கு செல்லத் தயாராகிய  பாடசாலை மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது நடேஸ்வரராஜன் அக்ஸயா (வயது-17) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த  சம்மாந்துறை பொலிஸார் மின்னொழுக்கினால் எவ்வாறு தீ பரவியது கொலையா? தற்கொலையா? என விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments