பெண் மீது துஷ்பிரயோகம்; இருவருக்கு 93 ஆண்டுச் சிறை

பெண் ஒருவரை கடத்தி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு 42 மற்றும் 51 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

36 மற்றும் 41 வயதுடைய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு குறித்த இருவராலும் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பில் குறித்த இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

36 வயதுடைய நபருக்கு 42 வருட சிறைத்தண்டனையும், 41 வயதுடைய நபருக்கு 51 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு பிரதான குற்றவாளிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

No comments