நான் அப்படிச் சொல்லவே இல்லை; பல்டியடித்தார் முரளி

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள் எனது வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. எனது கருத்தை சில ஊடகங்கள் திரிபுபடுத்தி விட்டன என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பிபிசி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கோத்தாபய ராஜபக்சவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முரளிதரன் "சமாதான பேச்சுக்களின் போது புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளைக் கொலை செய்தனர். புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் முக்கியமான நாள்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அது தொடர்பில் கேட்கப்பட்ட போது அவர் அதனை மறுத்துள்ளார்.

மேலும்,

எனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளன. எனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுங்கள். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியதாகவே கருத்து வெளியிட்டேன்.

இந்தநிலையில், இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்துடனான ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இதற்கான காரணம். - எனவும் தெரிவித்துள்ளார்.

No comments