கைதாகின்றார் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க?


கோத்தபாயவை காப்பாற்ற தயாராக இருப்பதாக உறுதி மொழி வழங்கிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க கைதாகவுள்ளார்.எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் உரையாடல் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சமூக வலைத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) வெளியிட்ட குரல் பதிவு வீடியோ தொடர்பில் அன்று பிற்பகல் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை சந்தித்து  சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரால் பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

இந்தக் கோரிக்கை நாளை (23) முன்வைக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன கூறியுள்ளார்.

No comments