முல்லைதீவு நீதிமன்ற சூழலிலும் பதற்றம்?

பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசாரசார தேரர் உள்ளிட்ட பெரும்பாலான பௌத்த பிக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வருகை ,நீராவியடி பௌத்த பிக்குவின் உடலம் தகனம் தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்றுவருகின்றது.

முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் தங்கியிருந்த பிக்குவின் செய்வது தொடர்பான நீதிமன்ற கட்டளையினை எதிர்பார்த்து பிக்குகள் மற்றும் சிங்களவர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே உடலை அடக்கம் செய்ய முயற்சிகள் தொடரும் நிலையில் இரவிரவாக கலகம் அடக்கும் பொலிசார் சகிதம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நீராவிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் தங்கியிருந்த பௌத்த பிக்கு உயிரிழந்த நிலையில் துறவியின் இறுதி திகழ்வுகள் நேற்று இடம்பெற இருந்த நிலையில் நீதிமன்றினால் இன்றுவரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் பௌத்த துறவியின் சடலம் அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதியில் இறுதிக் கிரிகை மேற்கொள்ளத் திட்டமிடப்படும் நிலையில் ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச சபை என்பன தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றின் கவனத்திற்கு செல்லும் குறித்த விடயத்தின் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில் ப்பகுதி பெரும் பதற்றம் நிலவுவம் நிலையில் குறித்த விடயத்திற்கு தீர்வினை எட்டும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநர் மாவட்டச் செயலாளருடன் தொடர்பு கொண்டு குறித்த விடயத்திற்கு இருபகுதியின் இணக்கத்தையும் பெறுவதற்கு முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் குறித்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதன் காரணமாக இன்றைய நீதிமன்றின் தீர்ப்பை எதிர்பார்த்து பலரும்  காத்திருக்கும் நிலையில் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது.-

No comments