கரன்னகொடவிடம் விசாரணை நடத்த உத்தரவு!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவிடம் மீள நாளையும் நாளை மறுதினமும் விசாரணைகளை நடத்தி வாக்கு மூலம் பெறுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை நிலைமைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியை வெளிப்படுத்தும் விதமாக இந்த மீள் விசாரணைக்கு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இவ்வாறு சி.ஐ.டி.க்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

No comments