விகாரைகளை கட்டுவதால் பிரச்சினை தீராது:சஜித்!


அனைத்து மாவட்டங்களில் வழிப்பாட்டு தலங்களை அமைப்பதால் மாத்திரம் நாட்டை வலுப்படுத்திவிட முடியாது.

இவ்வாறான நடவடிக்கைகள் மதங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படவே வழிசெய்கின்றன.
எதிர்வரும் 5 வருடங்களில் நாட்டில் உள்ள அனைத்து பௌத்த விகாரைகளையும் அபவிருத்தி செய்யம் திறமை எனக்கு உள்ளது. அதனை நிச்சயம் நான் செய்து முடிப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பௌத்தத்துக்கு முதலிடம் வழங்குவதனை போலவே அனைத்து இனங்களும், மதங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அத்துடன் நவீன பயங்கரவாதத்துக்கு எதிராக அறிவுப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச,  நவீன பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்கும் வகையில் அறிவுப்பூர்வமான வேலைத்திட்டங்களுடன்தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
'நவீன பயங்கரவாதமானது ஒரு எல்லையை அடிப்படையாக்க கொண்டது இல்லை. தனிமனிதனால் கூட  இன்று பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட முடியும்.

நவீன பயங்கரவாதத்துக்கு அறிவுப்பூர்வமான நாங்கள் முகங்கொடுக்க வேண்டும். அதற்கு நாட்டில் உள்ள மக்கள் சமூகத்தின் மத்தியில், இன, மதங்களுக்குள் சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்படவேண்டும்.

தேசிய நல்லிணக்கம் என்ற விடயத்திலேயே  தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது.
இன, மத,  வேறுபாடுளை துறந்து நாட்டு மக்கள் ஒன்றிணைந்து  தேசிய ஐக்கியம் ஏற்படும் போது, தேசிய பாதுகாப்பு வலுப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments