இளையோருக்கு இலவச சுய தொழில் வாய்ப்பு!

தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம், தேங்காய் சிரட்டை மூலம் கைவினை, அழகுசாதனப் பொருட்களை உருவாக்கும் கற்கை நெறியின் புதிய பிரிவுக்கான வகுப்புகளை செப்ரெம்பர் 27ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.

இலவசமாக வழங்கப்படவுள்ள இக்கற்கை நெறியில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கு பெறலாம் எனவும், இதன் மூலம் சுயதொழில் வாய்ப்புக்களை இளைஞர், யுவதிகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு எனவும் அறக்கட்டளை நிதியத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இங்கு கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளையும் அறக்கட்டளை நிதியத்தினர் வழங்கவுள்ளனர்.

மேலதிக தகவல்களை 0770829763 என்னும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

No comments