மாற்றுத்திறனாளிகளின் வாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் - ஆளுநர்


மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்ற வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

'எம் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளும் வாய்ப்புக்களும்' என்ற தலைப்பில் யாழ் பொது நூலகத்தில் இன்று (05) மாலை நடைபெற்ற ஐந்தாவது வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் அவர்களது தேவைகள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments