வந்தாறுமூலை படுகொலை நினைவேந்தல்

1990ம் ஆண்டு மட்டக்களப்பில் பரந்தளவில் நடைபெற்ற இனக்கலவரத்தில், பல தமிழ் மக்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தனர். அதே ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி அவ் அகதி முகாம், இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட முஸ்லீம் ஆயுதக்குழுக்களாலும் சுற்றிவளைக்கப்பட்டது.

இச் சுற்றிவளைப்பில் 150 க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என இன்று வரை அவர்களின் உறவுகளுக்கு தெரியவில்லை. இராணுவத்தினருக்கு எதிரான பல்வேறு சாட்சியங்கள் இருந்தும் இன்றுவரை காணாமலாக்கப்பட்டாேரின் உறவினர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது.

இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைத்து, இன்று (2019.09.05) கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில், காணாமல் பாேனவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பலர் இணைந்து வந்தாறுமூலை படுகொலை நாளினை நினைவுகூர்ந்தனர்.

இவ் நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments