ஒக்டோபர் 11ல் தேர்தல்!

இடைநிறுத்தப்பட்ட எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் 11ம் திகதி நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிரான மனுவைக் கருத்திற்கொண்டு அங்கு கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட்டிருக்கவில்லை.

எனினும் குறித்த மனுவின் அடிப்படையிலான விசாரணைகளில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் மனுவை ஏற்றுக் கொண்டு விரைவில் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

No comments