அரசுக்கு எதிராக அதிகாலையில் நடந்த போராடம்! கடும் பாதுகாப்பு பாதுகாப்பில் முப்படையினர்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு பகுதிக்கு டிப்பர் வாகனம் மூலம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (03) அதிகாலை புத்தளம் - கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்றது.

புத்தளத்தைச் சேர்ந்த மூவின இளைஞர்களும் ஒன்று சேர்ந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்று அதிகாலை (03) 12.10 மணிக்கு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஒன்று௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், "கொழும்பை அழகுபடுத்தும் நோக்கில், புத்தளத்தை அசிங்கப்படுத்தாதே, கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம், சீனக் குப்பை எமக்கு வேண்டாம், bமலேசிய குப்பை எமக்கு வேண்டாம், எமது சூழல் எமக்கு வேண்டும், bஎமது பிள்ளைகளின் எதிர்காலம் எமக்கு வேண்டும்" போன்ற பல கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, புத்தளம் தலைமையக, வன்னாத்தவில்லு, முந்தல், நுரைச்சோலை கருவலகஸ்வெவ பொலிஸாருடன் இணைந்து, இராணுவம், பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, இராணுவ, கடற்படை, விமானப்படை உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

No comments