இராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்; அமைச்சரவை அனுமதி

யுத்த நிலமையினால் பாதிக்கப்பட்ட விஷேட தேவையுடைய முப்படையினர், பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்திற்கு சமனான ஓய்வு ஊதியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவர்கள் உயிருடன் இருக்கும் காலம் வரையில் இந்த ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments