அமேசான் காட்டில் 2,000 இடங்களில் தீ!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் மேலும் 2,000 இடங்களில் புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளதாக புதிதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் காட்டில் தீ பரவுவதற்கு காரணம் விவசாயிகள் தான் எனத் தெரிய வந்துள்ளது. விளை நிலம் மற்றும் மேய்ச்சல் நிலத்துக்காக காடுகள் தீ வைத்து அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், காடுகளுக்கு தீவைக்க தடை விதித்து பிரேசிலில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் இயற்றிய 48 மணி நேரத்தில் மேலும் 2 இடங்களில் தீ பரவியுள்ளது என அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.

No comments