ஷஹ்ரானின் பயங்கரவாத உண்மை வெளியானது; 97 தடவை எச்சரிக்கை!

உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும் தடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தே பயங்கரவாத அமைப்பின் தலைவருமான சஹ்ரான் ஹஷிம் மற்றும் அவரது குழுவினரின் தாக்குதலுக்கான சாத்தியப்பாடு தொடர்பில் பெலாலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு 97 சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டது என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு முதல் தாக்குதல் இடம்பெறும் வரை, குறித்த 97 அறிக்கைகள் அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவின் பிரதானியால் பிரமாணப் பத்திரம் மூலம் இன்று (03) உச்ச நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments