இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்துக்கொடுத்த முன்னுதாரணப் பெண் - தமிழ்செல்வன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்திற்கு இந்து மற்றும் கிறிஸ்த்தவ ஆலயங்களை ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒரு அமைத்துக்கொடுத்துள்ளார்.

ஜேர்மனியில் புலம் பெயர்ந்து வசித்து வரும் இராஜேந்திரம் துவாரகா எனும் பெண் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஊற்றுப்புலம் கிராமத்தின் பாடசாலை உட்பட  மாணவர்களின் கல்விக்கான உதவிகளை செய்து வந்த நிலையில்  அங்குள்ள மக்களின் நிலைமைகளை அவதானித்து சில வருடங்களுக்கு முன் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்த்தவ  மக்களின் வழிபாட்டுக்காக மாதா தேவாலயம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார்.

பின்ன அக் கிராமத்தில் முத்துமாரியம்மன்  ஆலயத்தை ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து  நவக்கிரகங்கள்,  உள்ளடங்களாக அழகான  ஆலயமாக அமைத்துகொடுத்துள்ளார். அதற்கான கும்பாபிசேகம் கடந்தவாரம்  சிறப்பாக இடம்பெற்றது.

பின்தங்கிய கிராம மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களின் வழிப்பாட்டுக்காக இவ்வாறு இரு மதங்களின் ஆலயங்களை அமைத்துக்கொடுத்த இராஜேந்திரம் துவாராகாவுக்கு கிராம மக்களின் தங்களின்  மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ளதோடு இவரால் இவ்வாலயம் அமைத்துக்கொடுத்திருக்காது விட்டால் தங்களால் இப்படியொரு ஆலயத்தை அமைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஊற்றுப்புலம் கிராமம் சார்பாக வாழ்த்துக்கள் அம்மணி. தாங்கள் ஒரு முற்போக்கான முன்னுதாரணப் பெண்ணாக செயற்பட்டுள்ளீர்கள்

No comments