கவலையில் சுமந்திரன்?


முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் நீதியை நிலைநாட்ட தவறிவிட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.

தனது ஆதரவாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் வலுவில் உள்ள நீதிமன்ற கட்டளையை மீறியதோடு ஆலயச் சூழலில் தகனம் செய்தமை இந்துமக்களை அவமதித்த மோசமான செயற்பாட்டினையும் சட்டத்தரணியை தாக்கிய சம்பவத்தினையும் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் நீதிமன்றை நாடிய நிலையில, நீதிமன்றம் வழங்கிய கட்டளையுள்ள சமயம் அவர்களால் மேல் நீதிமன்றை நாடியபோதும் முன்னர் வழங்கிய கட்டளையே வலுவில் உள்ளபோது ஆலய சூழலில் தகனம் செய்தமை இந்து மக்களை அவமதித்து வேண்டும் என்றே செய்த செயல்பாடானது மோசமான அடாவடித்தனமாகும். சைவ மக்களின் சமய நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டது மட்டுமன்றி சட்டத்தையும் மீறிச் செயல்பட்டுள்ளனர்.

இதேநேரம் குறித்த தகனக் கிரிகை எங்கே எப்படி இடம்பெற வேண்டும் என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த நிலையில் அதனை மீறி இடம்.பெற்ற சம்பவத்தின்போது அந்த இடத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்ற கட்டளையை எடுத்தியம்ப முற்பட்ட சட்டத்தரணி தாக்கப்படும்போது சட்டத்தை நடைமுறைப்படுத்தி நீதிமன்ற கட்டளையை காத்து மக்களையும் காக்க வேண்டிய பொலிசாரின் முன்னிலையில் நடந்தமை மேலும் ஏமாற்றம் அளிக்கின்றது. அதனால் இந்த பொலிசாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேநேரம் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செய்யலாம் என ஒரு பௌத்த துறவி கூற முற்படுவது பௌத்தத்திற்கு முன்னுரிமை என்றாலும் ஏனைய மதங்களிற்கும் தங்கள் அனுஸ்டானங்கள் கடமைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தலாம் எனவும் உண்டு. அதேநேரம் இங்கே நீதிமன்றம் சார்ந்த நிலையில் சட்டத்தினை விட மதம் மேலானதாக கொள்ள முடியாது எனவும் ஆதரவாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

No comments