மாணவர்களிற்கு அரசியல் அறிவு:சுமந்திரன் முயற்சி?


முல்லைதீவில் இந்து ஆலயத்தினுள் பிக்குவின் உடலம் தகனக்கிரியை செய்யப்பட கூட்டமைப்பு முதல் அனைத்து தமிழ் கட்சி பிரமுகர்களும் முடங்கிக்கொண்டுள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி தவிர எவருமே எட்டிப்பார்த்திராத நிலையில் சுமந்திரனோ பாடசாலைகள் தோறும் சுற்றுலா சென்றுவருகின்றார். 

இதனிடையே சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி,சாவகச்சேரி என பாடசாலைகள் தோறும் சென்று மாணவர்களிற்கு கொள்ளை விளக்கமளித்த அவர் நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம்.நாட்டில் முக்கிய திருப்பு முனை வருகின்ற போது அதில் பாதிப்புக்கள் கூட வரலாம். அல்லது பல புதிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம்.ஆகையினாலே மிக அவதானமாக முதிர்ச்சியோடு இந்த சூழ்நிலைகளை கையாள வேண்டும். அப்படியான மிக முதிர்ச்சியான அனுபவமிக்க தலைமை எங்களிடத்தில் உள்ளது.நாம் அதனை நிதானமாக பொறுப்புடன் முன்னெடுக்கின்றோம். நாம் இராஜ தந்திரமாக செயற்பட வேண்டும்.

எனவே மக்களும் பொறுமையாக எம்முடன் பயணிக்க வேண்டும். குறிப்பாக கல்வி சமூகம் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கூறியிருந்தார்.

இதனிடையே நீராவியடியில் காவல்துறை தாக்குதலில் யாழ்.பல்கலை மாணவர்களும் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments