ரணில் அரசுக்கு புரிகின்றதாம்:சுமந்திரன்!


யுத்தத்திற்குப் பிறகு நாங்கள் இந்த நாட்டிலே தலைநிமிர்ந்து சக பிரiஐகளாக சமஉரித்துடைய பிரஐகளாக எங்களுக்குரிய உரிமைகளோடும் தனியான உரிமைகளோடும் நாங்கள் வாழ்வதற்கேற்ற விதமாக அந்த எங்களுடைய அபிலாசையை இந்த அரசாங்கம் உணர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எங்களுடைய அரசியல் உரித்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு எங்களுடைய மக்களுடைய ஆதங்கம் தெளிவாகப் புலப்பட்டிருக்கிறதாகவும்; அதனால் அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுதுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளில் மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்ட தேர்தலிலே சமஷ்டியைக் கொண்டு வருவேன் என்று போட்டியிட்ட போதும் துரதிஸ்ரவசமாக தமிழ் மக்கள் வாக்களிக்காத காரணத்தினால் தோல்வியுற்றதாகவும் கூறியிருக்கின்றார்.

மேலும் போர் என்று நாங்கள் சொல்கிற பொழுது வேடிக்கைக்காக நாங்கள் போருக்குச் செல்லவில்லை என்று உங்களுக்குத் தெரியும். நாங்கள் வேறு வேலையில்லாத காரணத்தினால் போருக்குச் செல்லவில்லை. எங்களுடைய அரசியல் உரிமைகள், எங்களுடைய பிறப்புரிமை மறுக்கப்பட்டதன் காரணமாகத் தான் போராடுவதற்கு நாங்கள் தள்ளப்பட்டவர்கள். ஆகவே அந்த உரிமையை வழங்கி சகபிரiஐயாக வாழ வேண்டுமென்று தான் கொருகின்றோம் என்றார்.

No comments