அனைத்து அணு உலைகளையும் மூடுகிறது ஜப்பான்!

ஜப்பானில் இயங்கும் அனைத்து அணு உலைகளையும் மூடப்போவதாக சுற்றுப்புற அமைச்சர் Shinjiro Koizumi தெரிவித்துள்ளார். 
புதிதாக அமைச்சராக பதவியேற்றாள்ள அவர் 2011ஆம் ஆண்டு நடந்த Fukushima அணுச்சக்தி விபத்து மீண்டும் நேர்வதைத் தவிர்ப்பதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.மேலும்  ஜப்பான் எவ்வாறு அணு உலைகளை அகற்றலாம் என்பது குறித்து ஆராயப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும்  புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் அணு உலைகளின் செயல்பாடுகளைத் தொடர ஆளுங்கட்சியினர் விரும்புவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக Fukushima-வில் மூன்று அணு உலைகள் கசிந்து வெளியான கதிர்வீச்சின் காரணமாக 160 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

No comments