போராட்டங்களே நீதியைப் பெற்றுத்தரும்!-சிவவதனி

தமிழர் மண்ணில் புத்தரின் பெயரில் மீண்டும் பௌத்த பேரினவாத அடக்குமுறைகள்!

 நீதிமன்றின் தீர்ப்பையும் அவமதித்து காவல்துறையினரின் எதேச்சை அதிகார அடாவடித்தனத்தோடு தமிழர்களின் நிலத்தில் தமிழரின் ஆலயக் கேணியில் இனவெறியன் பிக்குவின் உடலம் தகனம் செய்யபடுகின்றது.

செத்தும் பேயாடும் சாதுவின் பெயரில் சிங்கள இனவெறிப் பேய்கள்!

நீதிமன்ற தடையை மீறி பிக்குவின் உடல் நீராவியடியில் செப்டம்பர் 23, இன்று தகனம் செய்ததை சர்வதேசமும் புலம் பெயர்ந்த தமிழரும் கண்டிக்க வேண்டும்!

முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பௌத்த பிக்குவின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடாத்தாக தகனம் செய்யப்பட்டுள்ளது.

அப் பகுதியில் இன்று திங்கட்கிழமை ஒன்று கூடியிருந்த பௌத்த வெறி பிக்குகள் மற்றும் சிங்கள இனவெறி  மக்களினாலேயே நீதிமன்ற கட்டளையை மீறிய இச் செயற்பாடு அத்துமீறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையினைத் தடுத்து நிறுத்துமாறு சட்டத்தரணிகளான கே.சுகாஸ், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் கேட்டும் காவல்துறை  பாரமுகமாக இருந்ததோடு சட்டத்தை மதியாத சிங்கள இனவெறியர்களுக்கே துணை நின்றனர்.

தமிழ் மக்கள் தடுத்த போதும்  பௌத்த பிக்குவின் உடல் ஆலய நீர்நிலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

செத்தும் பித்தனாவான் இனவெறி கொண்ட பிக்கு என இவன் பெயரில் ஆதிக்க அரச பயங்கரவாத தமிழினப் பகைச் செயல் வரலாறு பதிக்கிறது!

உலகத் தமிழினத்தின் உணர்வுகளும் செத்தே போனதோ? கண்டிப்போம்! சுட்டிக்காட்டி நீதி கேட்போம்!

தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துப் போராடும் சட்டத்தரணி சுகாசிற்கும் சட்டத்தரணி மணிவண்ணனுக்கும்  இதர கொள்கை வழுவா வழக்கறிஞர்கள், உணர்வாளருக்கும் பாராட்டுக்கள்!

வழக்கறிஞர் சுகாஸ் ஜநா வந்தும் “தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை தேவை” என்றும் குரல் கொடுத்துப் போராடினார்.

இப்பொழுது முல்லைத்தீவில் தமிழர் ஆலயத்தின் நிலத்தில் சிங்கள பிக்குவின் உடல் புதைக்கப்படப்போகிறது என்றவுடன் உடன் நீதிமன்றம் சென்றார்.

நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதும் அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அறிய அவர் நேரடியாக பிக்குவை எரிக்கும் இடத்திற்கு சென்று நீதிக்காக விவாதித்தார்.

சிங்கள பௌத்த பிக்குகள் நீதிமன்ற உத்தரவை மீறியது மட்டுமன்றி வழக்கறிஞர் சுகாஷ்,  வழக்கறிஞர் மணிவண்ணன் உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்களையும் வன்முறையைக்  கையிலெடுத்து தாக்கியதோடு கூடச் சென்ற தமிழ் மக்களையும் தாக்கி மிரட்டியும் உள்ளனர்.

அகிம்சையைப் போதித்த புத்தரின் பெயரில் இந்த இன வெறித் தாக்குதல்கள்! வன்மையாக கண்டிப்போம்!

இவை நடக்கும்போது சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சாவகச்சேரியில் இருந்தும் குரல் கொடுக்கவில்லை!

இலங்கை அரசுக்கோ, இரணிலுக்கு ஆபத்து என்றவுடன் ஓடிச் சென்று தனது அறிவைக்காட்டி வக்காலத்து வாங்கிய  சுமந்திரன் இன்று இளம் தமிழ் சட்டத்தரணிகளுக்கும்  எம் தமிழருக்கும்  ஆபத்து என்றவுடன் ஏன் குரல் கொடுக்கவில்லை!

தமிழ்த் தலைவர்களும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் கூட எதிர்க்காமல் கண்டிக்காமல்  ஊமைகளாக உள்ளனர்.

இளம் தமிழ் வழக்கறிஞர்களை தாக்கியதற்காக முல்லைத்தீவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஒரு தமிழ் வழக்கறிஞராகக்கூட கண்டனம் தெரிவிக்க சுமந்திரன் இதுவரை முன்வரவில்லை.

தமிழ் மக்கள் நாளை ஒன்றுகூடி தமக்காக குரல் கொடுத்த சுகாஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து போராடுகிறார்கள்!

உலகமெங்கும் வாழும் தமிழர் நாமும் வன்மையாக கண்டிப்போம்!

தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் திலீப காலங்களில் மக்கள் புரட்சியாக வெடிக்கட்டும்!


No comments