சஜித்-ரணில் பிளவென்கிறது மொட்டுக்கட்சி?


ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விதிக்கப்பட்ட நிபந்தனையை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்கவிடம் இரகசியமாக கூறியிருந்த போதிலும், ரணில் விக்ரமசிங்க அதனை கட்சியின் செயலாளரிடம் வெளிப்படுத்துமாறு கூறியிருந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
உடன்படிக்கைகள் எதுவும் இல்லை, இல்லை என்றே இப்போது சஜித்துக்கு கூறவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான யுத்தம் தற்பொழுது ஆரம்பித்துள்ளது எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

No comments