மோடியின் மனைவிக்கு சேலை கொடுத்த மம்தா!

இந்திய பிரதமர் மோடியும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இரு துருவங்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லி சென்ற மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்று  அவரைச் சந்தித்தார். முதலில் பிரதமருக்குப் பூங்கொத்து கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதேவேளை முன்னதாக மோடியைச் சந்திப்பதற்காக நேற்று கொல்கத்தா வானூர்தி நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார் மம்தா. அப்போது அங்கு பிரதமர் மோடியின் மனைவியான ஜசோதா பென்னை சந்தித்துள்ளார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி ஜசோதா பென்னுக்கு சேலை ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அத்தோடு வானூர்தி நிலையத்தில் சிறிதுநேரம் உரையாடியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments