வெள்ளை பெயின்ட் வாளியுடன் மும்முரமாக சுமந்திரன்?


திட்டமிட்டு ஜக்கிய தேசியக்கட்சி அரசு எல்லைக்கிராமங்களில் குடியேற்றம் முதல் பௌத்த மயமாக்கல் வரை தொடர மறுபுறம் அது பற்றியெல்லாம் வாய்திறக்காது அந்த அரசிற்கு முண்டுகொடுப்பதில் மும்முரமாகியிருக்கிறார் எம்.ஏ.சுமந்திரன்.

என்ன? ஏதுவென கேட்காது அரசியல்வாதிகளது வீர உரைகளை கொண்டு காவித்திரிவதில் இவை மும்முரமாகியிருக்கின்றன.அதிலும் ஜநாவில் வழங்கப்பட்ட கால நீடிப்பு தொடர்பாகவோ அல்லது ரணிலை அரசினை பாதுகாப்பது தொடர்பிலோ தயாராக இல்லாத இத்தரப்புக்கள் மறுபுறம் மைத்திரிக்கு முன்னாலோ ரணிலுக்கு முன்னாலோ வீர உரைகளை ஆற்றிவிட்டு பின்கதவால் டீல் பேசும் பாரம்பரியத்தை தொடர்வதால் சிங்கள தேசம் இவர்களை பொருட்டாக கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில் தமிழ் மக்களின் சொத்துகள் அழிக்கப்படுவது மீள நடக்காமல் இருப்பதற்கு இந்த நாட்டில் அரசியல் விஸ்திரதன்மை உருவாக்க வேண்டுமென்றும், வெறும் பௌதீக அபிவிருத்தியால், அரசியல் விஸ்திர தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் திருவாய் மலர்ந்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்ட தளங்களை பிரதமர், அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் மீள அமைப்பது யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கையில் வாழும் மக்களுக்கு முக்கிய செய்தியை தெரிவிக்கின்றதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீள நடக்காது என்பதனை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துமுள்ளார்.

யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


பிரதமர் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் யாழ்.மாநகர சபை எவ்வாறு அழியப்பட்டதென்பது வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒரு விடயம். நூலகம் ஒரு இரவில் தீக்கிரையானது, ஆத கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போது, பிரதமர் அமைச்சரவையில் இருந்த போது, அவருடைய சகாக்களினால் தீக்கிரையாக்கப்பட்டது. ஆனால், மாநகர சபை ஆனது, நீண்டகாலமாக, இலங்கை இராணுவத்தினால், அண்மையில் உள்ள கோட்டையில் இருந்து செல் அடித்து தகர்த்தப்பட்டது எனவும், சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

இவ்வாறு அழிக்கப்பட்ட இரு தளங்களையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து, மீள அமைப்பது வடபகுதியில் உள்ள அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு முக்கியமான செய்தி.

அந்த செய்தி என்னவெனில், இனிமேலும் இந்த சம்பவங்கள் நிகழாது, நாங்களாகவே, எமது கைகளினால் கட்டுகின்றோம் என்பதாகும் எனவும், அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமை இருப்பதற்கு, இந்த நாட்டில், அரசியல் விஸ்திரதன்மை இருக்க வேண்டும். வெறும் பௌதீக அபிவிருத்தி அதனை உறுதிப்படுத்தாது. அதற்கான முன்னெடுப்புகளும் செய்யப்படுகின்றன. அவை உறுதி செய்யப்படவில்லை.

பின்னடிக்காது முன்னெடுக்கப்பட வேண்டும். எமது மக்களினால் கொன்று குவிக்கப்படாத எமது சொத்துகளை சேதப்படுத்தாதவர்களாக, தமிழ் மக்கள் தனித்து வாழ்வதற்கான அரசியல் அத்திவாரம் போடப்பட வேண்டும். அதனை இந்த முக்கிய தருணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று வரை கறுப்பு ஜீலை நிகழ்விற்கோ பொதுநூலகம் எரிக்கப்பட்டதற்கோ ஜக்கிய தேசியக்கட்சி பொதுமன்னிப்புத்தானும் கோர தயாராகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments