கோடீஸ்வரர் ராஜரத்னம் சிறையிலிருந்து விடுதலை!

அமெரிக்காவில் பாரிய நிதி மோசடி மேற்கொண்டமை தொடர்பில் 11 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட  தமிழர் தண்டனை காலம் நிறைவடைவதற்க்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
 
நீயுயோக்கில் வசித்து வந்தகெலியான் நிறுவனத் தலைவரான ராஜ் ராஜரத்னம் பங்கு சந்தையில் உள் வியாபாரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2011தொடர்பில் அமெரிக்க எப்.பீ.ஐ நிறுவனம் நீண்டகாலம் வீசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்கியது.
  
கடந்த வருடம் அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்திற்கமைய 60 வயதை கடமை மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டில் சிறை தண்டனையை நிறைவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதற்கமைய இரண்டு வடங்களுக்கு முன்னரே ராஜ் ராஜரத்னம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments