சரத்பொன்சேகாவிற்கு போட்டியாக பதவி உயர்வு!


சரத்பொன்சேகாவிற்கு பதிலடி வழங்கும் வகையில் முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு மைத்திரி தலைமையில் நடைபெறவுள்ளது.

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ஆகவும் உயர் கௌரவ பதவிநிலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவிக்கு இணையான பதவி நிலைகளாக இவை உள்ளன.

இதற்கான அரசிதழ் அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும்  நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு முன்னாள் படைத் தளபதிகளுக்கும் உயர் பதவிநிலைகளை வழங்குவார் என தெரியவருகின்றது.

No comments