கைதானவர் நாலாம் மாடிக்காம்?


அமைச்சர் கபீர் ஹாஸிமின்  இணைப்புச் செயலர்  தஸ்லீம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் ஆள் அடையாள அணிவகுப்பில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவனெல்லை – தனாகம பகுதியில் உள்ள தஸ்லீமின் வீட்டில் வைத்து அவரைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில், மொஹம்மட் மில்ஹான் என்பவரே சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் சி.ஐ.டி. விசாரணைகளில் பயங்கரவாதி சஹ்ரான் குழுவின் முக்கிய நபராக கருதப்படுகின்றார்.
மொஹம்மட் தஸ்லீம் மீது  கடந்த மார்ச் 9 ஆம் திகதி அதிகாலை உறக்கத்தில் இருந்த போது வீட்டில் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யினரால் மூன்று சந்தேக நபர்கள்  மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போதே மில்ஹான் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
அடையாளம் காணப்பட்ட மூவரையும் மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது. 

No comments