தமிழகம் அழிவுப்பாதையில் செல்லவில்லை;வைகோவை அதட்டிய தமிழிசை!

வேலூரிரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளரை  ஆதரித்து பேசியா மதிமுக பொது செயலாளர் வைகோ. தமிழகத்தை சோமாலியா, நாகசாகிய போல மாற்றுவதே பாஜகவின் திட்டம் என்று கடுமையாக பேசினார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது , வைகோவின் எதிர்மறை பேச்சு கண்டனத்திற்குரியது. சோமாலியா, நாகசாகியுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அதட்டி பேசினார்.

வைகோ நினைப்பது போல் தமிழகம் எந்த அழிவுப்பாதையிலும் செல்லவில்லை.  பாமர மக்களுக்கான பிரதமர் மோடியின் திட்டங்களை வைகோ படித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

No comments