வைகோவுடன் தற்படம் எடுக்க 100 ரூபா கட்டணம்!

அண்மைக்காலமாக செய்தி ஊடகங்களிலும் , சமூகவளைதலங்களிலும் அதிகம் பேசப்படும் நபராக மதிமுக பொதுசெயலாளர் வைகோ திகழ்ந்து வருகிறார் , காரணம் அவர் நீண்ட காலத்திற்கு பின் மாநிலங்களவை சென்று தமிழக பிரச்சனைகள் தொடர்பில் தமிழர்கள் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறார் , இதனால் தற்காலத்து இளையவர்கள் அவரை இவ்வளவுகாலமும் சமூக வலைதளங்களில் கேலிக்கையாக பார்த்து வந்தவர்களுக்கு வைகோவின் உண்மை திறமையும் , தமிழகத்தின் மீது கொண்ட அக்கறையினால் இந்திய அரசை எதிர்த்து பாராளுமன்றத்தில் முழங்கி வருவதும் பலருக்கு புதுமையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இதனால் மதிமுக பொதுச்செயலர் வைகோவுடன் ஒளிப்படம் எடுத்துகொள்ள இளைஞர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். இதனை காரணமாக பயன்படுத்தி வைகோவுடன் தற்படம் எடுக்க 100 ரூபா செலுத்தவேண்டும் என மதிமுக தலைமைகழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதிமுக தலைமைக்கழகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கழகப் பொதுச்செயலாளருக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம்.
கழகப் பொதுச்செயலாளருடன் முகப்படம் (செல்ஃபி)  எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்த பட்சம் நிதியாக ரூபாய் 100/- வழங்க வேண்டும். கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments