ஜனாதிபதி கதிரை அல்லது கட்சி தலைவர்:சஜித் விடாப்பிடி!


தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியுடன் கட்சி தலைவர் பதவியும் தரப்படவேண்டுமென்பதில் சஜித் விடாப்பிடியாக உள்ளார்.

இது தொடர்பில் தனக்கு உறுதியான முடிவு தரப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கூட்;டணியை அமைக்க அனுமதிக்கப்போவதில்லையென ரணிலிற்கு சஜித்  அறிவித்துள்ளதாக தெரியவருகி;ன்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இவர்கள் இருவரின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு திருத்தம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு முன்மொழிவில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஐ.தே.க நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியுடன் கட்சி தலைவர் பதவியும் தரப்படவேண்டுமென வலியுறுத்தும் சஜித் அதுவரை கூட்;டணியை அமைக்க அனுமதிக்கப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளார்.

No comments