Header Shelvazug

http://shelvazug.com/

கிண்ணஸ் சாதனை தமிழன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் திறக்கப்பட்டது

பாக்கு நீரிணையைக் கடந்து சாதனையை நிலை நாட்டிய கிண்ணஸ் சாதனையாளன் அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை - ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான "குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்" இன்று (09) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இதனை நிதி அமைச்சர் மங்கள சமரவீர சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  திறந்துவைத்தார்.

இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் இதுவாகும். இதில் 8 வழித் தடங்களைக் கொண்டமைந்துள்ளது .

மேலும் தடாகமானாது சர்வதேச தர நீச்சல் போட்டிகளை நாடத்தக் கூடிய அதே வேளை,  வருடம் முழுவதும் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

No comments