ஜதேக கூட்டத்தில் குழப்பம்:நாமே ஆட்சியென்கிறார் மகி!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைத்தல்,மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் விடயங்களில் இணக்கப்பாடின்மையால் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குழப்ப நிலை இன்று ஏற்பட்டுள்ளது.இதனால் தீர்மானங்கள் இன்றி கூட்டம் நிறைவு பெற்றதாக தெரியவருகின்றது.

சஜித் பிறேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க பெரும்பாலானோர் விருப்பங்கொண்டுள்ள நிலையில் அதனை தவிர்க்க ஜனாதிபதி ஆட்சி முறைமையினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அதனை முன்னிறுத்தி ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கரு ஜெயசூரியாவை ரணில் முற்பட்டுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் கோத்தாவிற்கு சரியான போட்டியாளராக சஜித்தே பொருத்தமென பெரும்பாலானோர் வாதிட்டுவரும் நிலையில் ரணிலின் நிலைப்பாடு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ரணிலின் குசினியில் தங்கியுள்ளதாக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்ததுடன் அடுத்த இரண்டு மாதங்களில் தமது ஆட்சி வருமெனவும் அதன் பின்னர் அனைத்தும் நல்லபடியாக நடக்குமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகுமாரின் ஆதரவாளர்களிடையே உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

No comments