526 பற்கள் கொண்ட சிறுவன்! பத்திரமாக அகற்றிய மருத்துவர்கள்

சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் பல் முளைக்காத நிலையில், தாடையில் உருவாகியிருந்த கட்டியினுள் 526 பற்கள் இருந்தது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

 7 வயதாகும் ரவீந்திரனுக்கு  கீழ் தாடையில் ஏற்பட்ட வீக்கம் அதிக வலியை கொடுத்த நிலையில், சிகிச்சைக்காக சென்னை அருகே உள்ள  சவீதா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு எடுக்கப்பட்ட சோதனையில், ரவீந்திரனின்  வாயில் சிறுதும் பெரிதுமாக வளர்ச்சி யடையாத பற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கீழ்த்தாடைப் பகுதியில் உள்ள கட்டியும் அகற்றப்பட்டது.
பின்னர் அந்தக் கட்டியை அறுத்து பார்த்தபோது, அதனுள் சிறுசிறு பற்களாக மொத்தம் 526 பற்கள் இருந்துள்ளது. இதன் மொத்த எடை 200 கிராம் என்று கூறப்படுகிறது.  தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments